சினிமா

நடிகர் விஜய் சேதுபதி வேற லெவல்.. புகழ்ந்து தள்ளிய உச்ச நட்சத்திரம்!! யார்னு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து, முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் விஜய் சேதுப

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து, முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக ஏராளமான படங்களில் கெத்து காட்டி வந்த அவர் வில்லன், குணச்சித்திர வேடம், திருநங்கை மற்றும் தற்போது அப்பா என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து  வருகிறார். இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட மற்றும் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் கலக்கி வரும் அவர் தற்போது உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

சிரஞ்சீவி - விஜய் சேதுபதி

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது பேசிய சிரஞ்சீவி, விஜய் சேதுபதி ஒரு சிறந்த மனிதர், கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையும் உணர்ந்து நடிப்பவர் என வெகுவாக பாராட்டியுள்ளார். அவர்கள் இருவரும் இதற்கு முன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement