ரிலீசுக்கு முன்பே மரணகலாயில், சின்னாபின்னமாக Son of India திரைப்படம்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!

ரிலீசுக்கு முன்பே மரணகலாயில், சின்னாபின்னமாக Son of India திரைப்படம்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!



Telugu Movie Son of India Trolled by Twitter Netizens

தெலுங்கு மொழியில் நாளை (பிப். 18) வெளியாகவுள்ள திரைப்படம் Son of India. இந்த படத்தை டைமண்ட் ரத்ன பாபு எழுதி, இயக்கி இருக்கிறார். படத்தயாரிப்பு பணிகளை விஷ்ணு மஞ்சு மேற்கொண்டுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் Son Of India படத்தில், நடிகர்கள் மோகன் பாபு, ஸ்ரீகாந்த், தணிகெல்லா பரணி, அலி உட்பட பல்வேறு தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

மொத்தமாக 86 நிமிடங்கள் (1 மணிநேரம் 26 நிமிடம்) ஓடும் Son Of India திரைப்படம் முதலில் ஓ.டி.டி நிறுவனம் வாயிலாக ரிலீஸ் செய்யலாம் என படக்குழு தீர்மானித்த நிலையில், படம் வசூல் ஹிட் கொடுக்காது என்ற விஷயத்தை தெரிந்து அதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் படம் திரையரங்கில் நாளை வெளியாகவுள்ளது என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

Son of India

களநிலவரங்களை உறுதி செய்துள்ள அம்மாநில திரைப்பட ரசிகர்கள், ட்விட்டர் தளத்தில் விமர்சனத்தை பொங்கவைத்துள்ளனர். இதுவும் ஒருவிதமான விளம்பர யுக்தி என்றாலும், இதனை விமர்சிக்கும் பலரும் படத்திற்கு செல்லமாட்டார்கள். ஆனால், அப்படி பட வெளியீட்டுக்கு முன்னரே விமர்சனம் செய்யும் அளவு படத்தில் என்ன இருக்கும்? என்ற கேள்வியால் பலரும் தியேட்டருக்கு செல்லலாம். 

அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க கூடாது என்ற எண்ணத்திலேயே பலரும் படத்தை விமர்சித்து வருகின்றனர். ஆந்திராவில் உள்ள ஒரு திரையரங்கில் 2 டிக்கெட் மட்டும் படத்திற்கு புக்கிங் செய்ய, அதனை கப்புள்ஸ் புக்கிங் செய்து இருக்கலாம் என்றும், அதனை புகைப்படம் எடுத்து விமர்சித்து வருகின்றனர். இவ்வாறாக பல குழாய்கள் வாங்கி Son of India படம் நாளை ரிலீஸ் ஆகிறது.