பிரபல டிவி தொகுப்பாளினி தாப்பாவுக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல டிவி தொகுப்பாளினி தாப்பாவுக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?



tapa-marriage

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா சேனலில் லைவ் ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் தாப்பா.

நேபாளியான தாப்பா அஜித் நடித்த வேதாளம், விஸ்வாசம் என சில படங்களில்  நடித்திருக்கிறார். இப்போதும் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருகிறார்.மேலும் அவரிடம் பல பேட்டிகளில் எப்போது உங்களது  திருமணம் என கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்  எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார்.

tapa

இந்நிலையில் நேற்று  காலை சென்னை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோயிலில் ரகு என்பவரை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். அவருடைய திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மஹாலில் ஏற்பாடு செய்துள்ளார்.

tapa

மேலும் தனது திருமணம் ஒரு காதல் திருமணம் எனவும் கூறியுள்ளார். 
இதுகுறித்து தாப்பா கூறுகையில், பத்து வருஷ காதல் எங்களுடையது. எத்தனையோ தடைகள், பிரச்னைகளை தாண்டி இன்று கரம்பிடித்திருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எங்க வீட்டில் சம்மதம் வாங்கத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தோம். இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருக்கு.

tapa

என் கணவர் பெயர் ரகு. பிருந்தா மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர் என பல நடன இயக்குநர்களுக்கு உதவி நடன இயக்குநராக இருக்கிறார் என மகிழ்ச்சியுடன் கூறினார்.