தமிழகம் சினிமா

பிரமாண்ட சீரியலை தமிழில் ஒளிபரப்பாத சன் டிவி!! எந்த சீரியல் தெரியுமா?

Summary:

tamilnadu people feel for sun tv

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில், சீரியல் தொடர்களை சினிமா அளவிற்கு பிரமாண்டமாக எடுத்து ஒளிபரப்பிவருகின்றனர். சன்டிவி தொலைக்காட்சி சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆதரவு கொடுத்துவருகின்றனர். 

இந்தநிலையில் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தது.  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நந்தினி சீரியல் கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சன் டீவியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். நந்தினி சீரியலின் வளர்ச்சிக்கு அதில் நடித்த நடிகைகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். நந்தினி சீரியலை பிரபல இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார். அதில் ஹீரோயினாக நடித்த நித்ய ராம், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார். 

தற்போது நந்தினி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து லட்சுமி ஸ்டோர் என்ற புது தொடரை சுந்தர் சி நிறுவனம் தயாரிக்கிறது. அந்த தொடரில் நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடிக்கிறார். சன்டிவியின் நக்ஷத்திரவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம், சன் குழுமத்தின் தெலுங்கு சேனலான ஜெமினி டிவியிலும், கன்னட சேனலான உதயாடிவியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழக மக்களும்  நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம் தமிழில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்த்துவந்த நிலையில், அது நடக்காததால் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Advertisement