தமிழகம் சினிமா

ஜெயலலிதா ஆன்மாவிடம் கதை கேட்டு உருவாகும் படம்; நிறைய உண்மைகள் வெளி வரும் போலயே.!

Summary:

tamilnadu ex cm - jayalalitha new movie - jagatheswara reddy

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு திரைப்படங்கள் பல உருவாக உள்ளது. பல இயக்குனர்கள் தனித்தனியாக படம் எடுக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் சமீபத்தில் கூட இயக்குனர் ஏ.எல் விஜய் தலைவி என்ற பெயரில் எடுக்கும் ஒரு படத்தில் கங்கனா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 

இந்நிலையில் 'சசி லலிதா' என்ற பெயரில் தானும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தமிழ் தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆக இருக்கும் இவர் 'ஜெயம் மூவிஸ்' என்ற பெயரில் இந்திய மொழி படங்கள் பலவற்றை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜெயலலிதாவின் இளமைக்காலம் தொடங்கி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து அவர் செய்த சாதனைகள். மற்றும் சசிகலாவுடன் அவர் வைத்திருந்த ஆழமான நட்பு ஆகியவற்றைப் பற்றி இப்படம் விரிவாக கூறும். அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது முதல் முதல்வர் ஆகியது வரையிலும் மேலும் தன்னுடைய இறுதி காலத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று உயிரிழந்தது வரை படமாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இப்படம் உண்மை தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா ஆன்மாவிடம் பேசி அதன் மூலம் வெளிவரும் தகவலின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமையும் என்று தெரிவித்து ஜெகதீஸ்வர ரெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Advertisement