தமிழகம் சினிமா

இத்தனை கோடி பேசியும் ஜெயலலிதாவாக நடிக்க மறுத்த பிரபல தமிழ் நடிகை; இதுதான் காரணமாம்?

Summary:

tamilnadu - ex cm - jayalalitha movie - vidhya balan

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் நடிக்கும் 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகியுள்ளார்.
 
இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், தல அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்குகிறார். இப்படத்தில் ஜெயலலிதாவாக  நடிக்க வித்யாபாலனுக்கு 24 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது.

ஆனாலும் இந்த படவாய்ப்பை வித்யாபாலன் மறுத்துள்ளார். ஏனெனில், பிரபல அரசியல் தலைவர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸில் நடிக்கயிருப்பதால், இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

 

அதனால் தான் ஜெயலலிதாவாக நடிக்கும் வாய்ப்பு கங்கனா ரனாவத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால், இப்படத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement