வாட்சப்பில் சீரியல் நடிகையின் ஆபாச போட்டோ லீக்.. மோசடியில் சிக்கிய நடிகையை கதறவிட்ட கேடி கும்பல்.. கண்ணீர் வீடியோ.!

வாட்சப்பில் சீரியல் நடிகையின் ஆபாச போட்டோ லீக்.. மோசடியில் சிக்கிய நடிகையை கதறவிட்ட கேடி கும்பல்.. கண்ணீர் வீடியோ.!


Tamil TV Serial Actress Lakshmi Vasudevan Cheated by Scam App

தமிழில் விஜய் தொலைக்காட்சி, ஜீ தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் சீரியலில் மாமியாராகவும், அம்மா கேரக்டரிலும் அதிகமாக நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் இணையத்தில் கதரி அழுது வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "எனது புகைப்படத்தை தவறாக மார்பிங் செய்து யாரோ என் வாட்ஸப்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இது எப்படி தொடங்கியது? என்று நான் தற்போது கூறுகிறேன். ஏனெனில் நான் செய்த தவறை வேறு யாரும் செய்துவிடக்கூடாது. ஒரு வாரத்திற்கு முன்னதாக செப்டம்பர் 11ஆம் தேதி 5 லட்சம் ரூபாய் பணத்தை வென்றீர்கள் என்ற ஒரு மெசேஜ் வந்தது. 

Tamil serial

அந்த லிங்கை நான் ஓபன் செய்தவுடன், ஒரு ஆப் தானாகவே டவுன்லோடானது. அன்றிலிருந்து எனது மொபைல் போனும் ஹேக் செய்யப்பட்டது. இது எனக்கு 3 நாட்களுக்கு பின்தான் தெரிந்தது. மூன்று நாட்களுக்குப் பின் நீங்கள் லோன் வாங்கியுள்ளீர்கள், 5000 ரூபாய் லோன் வாங்கியுள்ளீர்கள். அதனை கட்ட வேண்டும் என்ற குறுந்தகவல் வந்தது. தொடர்ந்து என்னிடம் ஆபாசமாக பேசி, பணம் செலுத்தவில்லையெனில் உங்கள் வாட்ஸப்பில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்தை அனுப்பிவிடுவோம் என்று மிரட்டினர். 

Tamil serial

இதன்பின் தான் எனக்கு இந்த விஷயம் எவ்வளவு சீரியசானது என தெரிந்தது. இதனால் நான் ஹைதராபாத்தில் உள்ள சைபர்கிரைமில் புகாரளித்தேன். அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் எனது வாட்ஸப்பில் உள்ள நண்பர்களுக்கு என் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அனுப்பியுள்ளனர். என் நண்பர்கள் மட்டுமல்லாது என் பெற்றோருக்குகூட இந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். அனைவருக்கும் தெரியும் நான் எப்படிப்பட்டவர் என்று, ஆனால் இந்த விஷயத்தை எவ்வளவு தைரியமானவராய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

Tamil serial

என்னை போல் யாரும் செய்துவிடாதீர்கள். உங்கள் மொபைலுக்கு பரிசு வென்றுவிட்டீர்கள் அல்லது லோன் சம்பந்தமாக எந்த குறுந்தகவல் வந்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். அவர்கள் கூறும் ஆப்ஸ்களையும் டவுன்லோட் செய்துவிடாதீர்கள். ஒரு வேலை டவுன்லோட் செய்தால் அடுத்த நிமிடமே உங்களது மொபைல் ஹேக் செய்யப்படும். எனக்கு தெரியும் இந்த விஷயத்தால் பலரின் உயிர் பிரிந்துள்ளது. 

இதுகுறித்து காவல்துறையினர் என்னிடம் கூறும்போது, நீங்கள் ஒரு விழிப்புணர்வு வீடியோ அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்கள் இதுபோல பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்று கூறியதால், நான் வீடியோவை பதிவிட்டேன். ஒருவேளை இது போன்ற மெசேஜ்கள் உங்கல் வாட்ஸப்பில் வந்தால் அதனை ரிப்போர்ட் செய்துவிடுங்கள். அப்போதுதான் வேறு யாருக்கும் இதனை அவர்களால் அனுப்ப முடியாது" என்று கதறி அழுது கூறியுள்ளார்.