சினிமா

சன்னி லியோனையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ். உண்மையிலேயே நீங்க ராக்கர்ஸ்த்தான்.

Summary:

Tamil rockers leaked actress sunny Leone biography movie

சன்னி லியோன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், ஜீ5 செயலியில் வெளியிடப்பட்ட உடனேயே, தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.  ப்ளுபிலிம்களில் நடித்து இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஆபாச நடிகை சன்னிலியோன், தற்போது பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பெரும்பாலும், ஆபாச காட்சிகளில் நடிக்கவே அவரை நடிகர்களும், இயக்குநர்களும் அணுகி வருகின்றனர். இதனிடையே, கரென்ஜித் கவுர் -அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் என்ற படம் எடுக்கப்பட்டது. வெப்சீரிஸாக எடுக்கப்பட்ட இந்தப் படம் ஜீ5 செயலியில் மட்டுமே வெளியாகிறது.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோனின் குழந்தை பருவம், இளம் வயதில் அவர் பட்ட அவமானங்கள், குடும்பச் சூழலால் அவர் எப்படி ப்ளூபிலிம்களில் நடிக்க ஆரம்பித்தார் என சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறே, கரென்ஜித் கவுர் என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியான உடனே பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் ஜீ5 செயலியில் படம் வெளியிடப்படுகிறது.

ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், தோனி, மேரிகோம் என விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட சன்னி லியோன் வாழ்க்கைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாது. ஆனால் ஜீ5 செயலியில் பார்க்கலாம்.

இந்நிலையில்தான், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழ் திரைப்படத்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் தற்போது பாலிவுட் பக்கமும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஏற்கெனவே நெட்பிளிக்ஸில் வெளியான சேக்ரெட் கேம்ஸ் வெப் சீரிஸை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ், தற்போது கரென் ஜித் கவுர் – அன் டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோனையும் லீக் செய்துள்ளது. சன்னி லியோன் படத்தை பார்க்க முடியாமல் தவித்த இளைஞர்கள் தற்போது குஷியில் இருந்தாலும், திரைப்படக் குழு அதிர்ச்சியில்தான் இருக்கிறது.


Advertisement