ஆசைக்கு இணங்க மறுத்ததால் பட வாய்ப்பின்றி தவித்தேன்- பிரபல தமிழ் நடிகை.!

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பட வாய்ப்பின்றி தவித்தேன்- பிரபல தமிழ் நடிகை.!


tamil, hindi, telungu adithi rao hithari

ஆசைக்கு இணங்க மறுத்ததால் சில காலம் பட வாய்ப்பின்றி தவித்தேன் என்று பிரபல நடிகை அதிதி ராவ் ஹிதாரி தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகைகளை தொடர்ந்து பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து #MeToo ல் தெரிவித்து வந்தனர். சமீபத்தில் அது தொடர்பான புகார்கள் குறைந்து இயல்புநிலைக்கு திரும்பும் நிலையில், தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை அதிதி ராவ் ஹிதாரி பரபரப்பான புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார்.

aditi rao

இவர் டைரக்டர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் என்ற படத்திலும் சைக்கோ என்ற தமிழ் படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

aditi rao

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை அதிதி ராவ் ஹிதாரியும் தனது மீ டூ அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தனது ஆரம்ப காலக்கட்டத்தில் தனக்கும் ஒரு மீ டூ சம்பவம் நேர்ந்தது, இதுவா அதுவா என தனக்கு 2 சாய்ஸ்கள் கொடுத்தனர், அவர்களது எதிர்பார்ப்பை மறுத்துவிட்டதால் 8 மாதம் வேலையில்லாமல் இருந்ததாக கூறினார். அச்சம்பவம் தன்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும், நம்பிக்கை இழந்த நிலையில், தனது மேனேஜர், நண்பர்கள், குடும்பத்தினர் உத்வேகம் அளித்து பக்க பலமாக இருந்தனர் என்றார் அதிதி