தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஜோதிகா, சமந்தாவை போல் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் பிரபல தமிழ் நடிகை.!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா திருமணத்திற்கு பிறகும் தான் சினிமாவில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தியான சாயிஷா, வனமகன் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்து பிறகு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் தனது திருமணம் மற்றும் சினிமா பற்றி நடிகை சாய்ஷா கூறும்போது: ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி. எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு எடுக்க ஆர்யா எனக்கு முழு உரிமை கொடுத்துவிட்டார். எனவே தொடர்ந்து நடிப்பேன்.
கதாநாயகர்களுக்கு முக் கியத்துவம் அளிக்கும் படம், தனி கதாநாயகி எனும் வித்தி யாசம் எல்லாம் பார்க்காமல் எப்போதும் போல் அனைத்துப் படங்களிலும் நடிப்பேன். சமந்தா, ஜோதிகா போன்றோரை இதில் முன்னுதாரணமாக கொண்டுள் ளேன், என்கிறார் சாயிஷா.