தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் இருக்காங்க... உதயநிதி ஸ்டாலின் யாரை கூறியுள்ளார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் இருக்காங்க... உதயநிதி ஸ்டாலின் யாரை கூறியுள்ளார் தெரியுமா.?


Tamil cinema two dons one sivakarthikeyan and anirudh

சிவகார்த்திகேயன் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்திருந்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் அதில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

sivakarthikeyan

இந்நிலையில் டான் திரைப்படம் வருகின்ற மே 13 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் டான் படத்தின் டிரைலர் மற்றும் ப்ரோமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் இருக்கின்றனர் ஒன்று சிவகார்த்திகேயன் மற்றொன்று அனிருத் என பேசியுள்ளார்.