சினிமா

#HBD மிஷா கோஷல்: நயன்தாரா, சுருதி ஹாசனுடன் நடித்த நடிகைக்கு இன்று குவா., குவா டே..!

Summary:

#HBD மிஷா கோஷல்: நயன்தாரா, சுருதி ஹாசனுடன் நடித்த நடிகைக்கு இன்று குவா., குவா டே..!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தக்கவைத்த நடிகை மிஷா கோஷல். இவர் கடந்த 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 

பின்னர், அந்த படத்திற்கு பிறகு திரையுலகில் எந்ததொரு திரைப்படத்திலும் பெரியளவில் நடிக்காமல் இருந்த மிஷா கோஷல், 7 ஆம் அறிவு மற்றும் ராஜா ராணி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். 

இதனைத்தவிர்த்து, நான் மகான் அல்ல, 180, முகமூடி, இஷ்டம், வணக்கம் சென்னை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும், வாலு, விசாரணை, குற்றம் 23, மெர்சல் ஆகிய படங்களிலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார். 

திரையரங்கில் தொகுப்பாளராக அறிமுகமான மிஷா கோஷல், பின்னாளில் திரைப்படத்தில் துணை நடிகையாக வளரும் அளவு தன்னை உயர்திக்கொண்டாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் கடந்த நவ.31 ஆம் தேதி 1981 ஆம் வருடம் பிறந்தார். 

ஆம். இன்று அவருக்கு பிறந்தநாள். அவரது திரையுலக வாழ்க்கைப்பயணம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல, அவரின் ரசிகர்களாக அவரை அவரின் பிறந்தநாளில் வாழ்த்துவோம். 


Advertisement