த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
ஹேமா கமிட்டி: பெயரை கேட்டாலே வாயை மூடும் தமிழ் நடிகர்கள்..!
மலையாள திரையுலகில் நடந்த நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகி தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. திரைப்பட நடிகைகளை படுக்கைக்கு அழைத்ததாக பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.
ராதிகா குற்றசாட்டு
இதனிடையே, கேரளாவை போல தமிழ்நாட்டிலும் கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என நடிகை சனம் செட்டி தொடர்ந்து போராடி வருகிறார். அதேபோல, நடிகை ராதிகா மலையாள திரைஉலகில், நடிகைகளின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா வைப்பார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். ஒருபக்கம் ஹேமா கமிட்டிக்கு ஆதரவு, மற்றொருபக்கம் பதில் கூறாமல் இருப்பது என திரைத்துறையில் மூத்த, முன்னணி நடிகர்களும் இருவேறு கருத்துக்களை கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: Siragadikka Aasai: விஜயாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி; செக் வைத்த முத்து & ரவி.! அசத்தல் ப்ரோமா.!!
ஹேமா கமிட்டி குறித்த கேள்விக்கு பதில்
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஹேமா கமிட்டி குறித்து கேட்டபோது, "அதனைப்பற்றி எனக்கு தெரியாது, மன்னிக்கவும்" என கூறினார். நடிகை சுகாசினி பதில் ஏதும் சொல்லவில்லை. நடிகர் ஜீவா "தமிழ் சினிமாவில் அதுபோல் ஏதும் இல்லை. திரும்பத்திரும்ப பதில் சொல்ல முடியாது" என கூறினார்.
நடிகை கஸ்தூரி "நடிகை ராதிகா மூத்த நடிகை. அவர் கூறும் கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்" என கூறினார். நடிகர் கார்த்திக், "இது அதற்கானது இல்லை. அந்த விசயத்திற்கான கருத்தை வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கலாம். இங்கு அதைப்பற்றி வேண்டாம்" என கூறினார். நடிகர் தியாகராஜன் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றார்.
ஹேமா கமிட்டி குறித்து தெரிந்தும் தெரியாததுபோல், அதைப்பற்றி எந்த ஒரு தகவலையும் தெரிந்துகொள்ளமல் நடிகர்கள் தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நியாயம் எங்கு கிடைக்கப்போகிறது என்ற கேள்விதான் நெட்டிசன்கள் கேள்வியாக இருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை; நழுவும் கோலிவுட் பிரபலங்கள்!#HemaCommittee | #Karthi | #Rajinikanth | #jeeva | #theyagarajan | #Amma | #suhasini | #kasturi | #Malayalamfilmindustry | #HemaCommitteeReport pic.twitter.com/7mKe5oJS68
— Tamil The Hindu (@TamilTheHindu) September 2, 2024
இதையும் படிங்க: Bakiyalakshmi Promo: மறைந்த ராமமூர்த்தியின் இறுதிப்பயணம்; கொள்ளி வைக்க முடியாத பாவியான கோபி; மகளான பாக்கியா..!