சினிமா

முத்தக்காட்சிகளில் நடிப்பதில் இப்படியொரு முடிவா!! ரசிகர்களை தலைசுற்றவைத்த தமன்னா!!

Summary:

tamannah take decision about kiss scene

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் தமன்னா. தெலுங்கில் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

மேலும் தமன்னா பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் . தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா முத்த காட்சிகளில் நடிப்பது குறித்து அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதாவது இனி அதிக சம்பளம் கொடுத்தால் கூட முத்தக்காட்சிகளில் நடிக்க கூடாது என்ற முடிவில் உள்ளாராம்.

 


Advertisement