சினிமா

ப்பா.. நடிகை தமன்னாவா இது! பள்ளி பருவத்தில் செம கியூட்டாக எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் கேடி  என்ற படத்தில் நெகடிவ் ரோலில் நடித்ததன் மூலம்  அறிமுகமானவர

தமிழ் சினிமாவில் கேடி  என்ற படத்தில் நெகடிவ் ரோலில் நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். பின்னர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 நடிகை தமன்னாவிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.  தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நவம்பர் ஸ்டோரி என்ற டெஸ்ட் தொடரில் நடித்து இருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் தமன்னா தெலுங்கில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்த நிலையில் தற்போது அவரது பள்ளிக்காலத்தில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் தமன்னா செம க்யூட் என கூறி வருகின்றனர்.


Advertisement