நடிகை தமன்னாவுக்கு திருமணமா? மாப்பிள்ளை இவர்தானா? அவரே வெளியிட்ட ஷாக் தகவல் இதோ!!

நடிகை தமன்னாவுக்கு திருமணமா? மாப்பிள்ளை இவர்தானா? அவரே வெளியிட்ட ஷாக் தகவல் இதோ!!


tamanna explain about her marriage

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

நடிகை தமன்னா தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் . மேலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் அவர் இந்திய அளவில் பெருமளவில் பிரபலமானார்.

tamanaah

மேலும் பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் தமன்னா ராணுவ உளவு அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் பெட்ரோமாக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, தட் ஈஸ் மகாலட்சுமி  ஆகிய படங்களும் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் தமன்னாவிற்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கு மிகவும் விறுவிறுப்பாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் திருமணத்துக்கு பிறகு அவர் சினிமாவை விட்டு விலக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் தமன்னா தனக்கு திருமணம் என பரவிவரும் தகவல் வதந்தி எனவும்,  நான் சினிமாவில் இருந்து விலகமாட்டேன். எனக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது எனவும் விளக்கமளித்துள்ளார்.