சினிமா

தயாரிப்பாளர்கள் நலனுக்காக அதிரடியாக களமிறங்கும் டி. ராஜேந்தர்! அவரே வெளியிட்ட அறிவிப்பு!

Summary:

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டி ராஜேந்தர் அவர்கள் அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடத்தப்படவுள்ளது. மேலும் தேர்தல் அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர், இயக்குனர்,  தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் டி ராஜேந்தர் அவர்கள் நேற்று சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்பொழுது அவர் கொரோனாவால் 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடந்த நிலையில் 15ந்தேதி முதல் சில நிபந்தனைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை மற்றும் தமிழக அரசு உள்ளாட்சி வரியை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

தயாரிப்பாளர்கள் நலனுக்காக நான் பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறேன். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென  பல தயாரிப்பாளர்கள் என்னை வற்புறுத்தினார்கள். எனவே தயாரிப்பாளர்கள் நலனை பாதுகாக்க தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.


Advertisement