சினிமா

இந்த நேரத்தில் இதெல்லாம் சாதாரண விஷயமில்லை! ரசிகர்களை வாழ்த்திய நடிகர் சூர்யா!

Summary:

Surya wish fans to help poor people

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி  நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி  எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.  இத்தகைய ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி, வருமானமின்றி வறுமையில் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நிவாரண பொருட்கள் அளித்து உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.  அவர்களைப் பாராட்டி நடிகர் சூர்யா ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் ரசிகர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபடுவது சாதாரண விஷயமில்லை. இதனை யாருக்கும் நிரூபிப்பதற்காக நாம்  செய்யவில்லை. தொடர்ந்து உதவி செய்யுங்கள். தன்னை வருத்திக் கொள்ளாமல் செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள். யாருக்கெல்லாம் ரொம்ப கஷ்டம் இருக்கிறதோ அவர்களுக்கு உதவி போய் சேர்கிறதா என ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள். நிறைய தம்பிகள் நிறைய இடங்களில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் உதவிகள் செய்வது ஆச்சரியமாக உள்ளது. இது  சாதாரண விஷயமில்லை வாழ்த்துக்கள் என சூர்யா கூறியுள்ளார்.

 


Advertisement