மீண்டும் வரலாற்று பின்னணி கதையில் சூர்யா? வெளியான அசத்தல் தகவல்.!

மீண்டும் வரலாற்று பின்னணி கதையில் சூர்யா? வெளியான அசத்தல் தகவல்.!


Surya sudha movie period movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போதைய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று பின்னணியில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

surya

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா இருவரும் நடிக்க உள்ளனர்.

surya

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை 1960களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.