இனி வருமானம் கொட்டபோகுது.! புதிய தொழிலில் கால் பதிக்கும் நடிகர் சூர்யா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!surya-starts-new-business

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட், மாஸ் படங்களில் நடித்து தற்போது பரபரப்பு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, சில காலங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். மேலும் இவர் நடிகராக மட்டுமின்றி, தற்போது பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

surya

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது புதிய தொழிலை தொடங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது அவர் தமிழகத்தில் 5 திரையரங்குகளை லீசுக்கு எடுக்க போவதாக கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் அவரது வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.