சினிமா

நடிகர் சிபிராஜின் பிறந்தநாளுக்கு சூர்யா கொடுக்கும் மாபெரும் பரிசு! வெளியான தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

சிபிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சூர்யா நாளை மாலை 5 மணிக்கு அவரது கபடதாரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார்.

கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காவலுதாரி. இப்படத்தின் தமிழ் ரீமேக் சிபிராஜ் நடிப்பில் கபடதாரி என்ற பெயரில்  உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். 

மேலும் அவர்களுடன் நாசர்,மயில்சாமி  ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார் போன்ற பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கபடதாரி திரைப்படத்தை  கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் என்பவர் தயாரிக்கிறார்.
 சத்யா, சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கொரோனோவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு  முடிவடைந்த நிலையில், தற்போது படம் வெளியிடுவதற்கான இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா, சிபிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 6 நாளை மாலை வெளியிடுகிறார். இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


Advertisement