அடேங்கப்பா.. ஏர்போர்டில் புதிய பிஸினஸ்! பல கோடி சம்பாதிக்கிறாரா நடிகர் சூர்யா! வெளிவந்த தகவல்!!surya-parking-contract-business-in-airport

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட், மாஸ் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அவர் இறுதியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். 

மேலும் அவர் கைவசம் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் வணங்கான், வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்கள் உள்ளன. சூர்யா நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தற்போது பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

surya

சூர்யா சிறந்த தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார். அவர் மும்பையில் முக்கிய தொழிலில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து, தற்போது சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய ஊர்களில் உள்ள விமான நிலையத்தில் பார்க்கிங் காண்ட்ராக்ட்டை நடிகர் சூர்யா எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் நடிகர் சூர்யாவிற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.