சூர்யாவின் என்ஜிகே டீசர் வெறித்தனமா இருக்கு; வெளியான கார்த்தியின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்.!

சூர்யாவின் என்ஜிகே டீசர் வெறித்தனமா இருக்கு; வெளியான கார்த்தியின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்.!


surya ngk movie teaser said karthi

நடிகர் சூர்யாவின் என்ஜிகே படத்தின் டீசர் வெறித்தனமா இருக்கு என்று நடிகரும் அவரது தம்பியுமான கார்த்தி தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

அரசியலை மையமாக கொண்ட இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் என்.ஜி.கே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் வளியாகின. அதில் சூர்யா புகைப்படத்துடன் கூடிய பேனர்களில் காக்கும் முன்னேற்ற கழகம் (KMK ) என்ற கட்சியின் பெயர் இடம்பெற்றதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.  

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டீசருக்கான டப்பிங் பணியை முடித்துள்ளனர். இதற்கிடையில், என்.ஜி.கே படத்தின் டீசரை பார்த்த கார்த்தி கூறுகையில், வெறித்தனமாக இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.