சினிமா

அட.. நடிகர் சூர்யா இப்படி நடிக்கிறாரா! புதிய கெட்டப்பில் எப்படி இருக்காரு பார்த்தீங்களா!! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சூ

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா இறுதியாக சூரரை போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.

அதனைத் தொடர்ந்து சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். மேலும் சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது சூர்யா வக்கீல் உடையில் இருக்கும், போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்புகைப்படங்கள் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது எனவும் அதில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement