சினிமா

பட்டையை கிளப்பும் சூர்யாவின் அடுத்த பட தலைப்பு.! வரவேற்கும் ரசிகர்கள்!!

Summary:

surya movie title relased

தமிழில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர் .

இந்நிலையில் என்.ஜி.கே படத்தை தொடர்ந்து, கே.வி ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான். இந்த திரைப்படத்தில் மோகன்லால் ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

kaappaan movie க்கான பட முடிவு

மேலும் இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் உருவாகி வருகிறது. இப்படத்தின் தெலுங்கு தலைப்பு நேற்று வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை மற்றும் இயக்குனரான விஜய நிர்மலாவின் மறைவையொட்டி அது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கில் காப்பான் படத்திற்கு பந்தோபஸ்த்  என பெயரிடப்பட்டுள்ளது. இதனை பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
 


Advertisement