அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சர்வதேச அளவில் சூர்யாவின் சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படத்திற்கு கிடைத்த கவுரவம்! செம ஹேப்பியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் இறுதியாக சூர்யா நடிப்பில் வெளிவந்து பிரபலமான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூரரை போற்று படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப்போற்று படம் உருவானது. கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படம் ஹாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டு ஜுன் 11 முதல் 20 வரை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் பனோரமா பிரிவில் திரையிட சூரரைப் போற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது இந்த படத்திற்கு கிடைத்த மிக உயரிய கவுரவம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் படக்குழுவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.