அட.. சூர்யா- ஜோதிகாவா இது! கேஷுவல் உடையில், கடற்கரையில் ஜாலி வாக்கிங்! செம வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!

அட.. சூர்யா- ஜோதிகாவா இது! கேஷுவல் உடையில், கடற்கரையில் ஜாலி வாக்கிங்! செம வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!


Surya jothika walking in beach photo viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை டிஜே ஞானவேல் இயக்க, 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்தது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதே சமயம் வன்னியர்கள் சமூகத்தினரை தவறாக சித்தரிப்பது போன்று இருப்பதாக சர்ச்சையும் எழுந்தது. நடிகர் சூர்யா பிரபல முன்னணி நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் நட்சத்திரக் ஜோடிகளாக விளங்கிவரும் இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

surya

திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த ஜோதிகா தற்போது மீண்டும் கதை மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சாதாரண உடையில் மிகவும் கேஷுவலாக கடற்கரையில் வாக்கிங் சென்றுள்ளனர். அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.