ஹிந்தியில் கால்தடம் பதிக்கும் சூர்யா? வெளியான அசத்தல் தகவல்.!

ஹிந்தியில் கால்தடம் பதிக்கும் சூர்யா? வெளியான அசத்தல் தகவல்.!



surya-introduce-in-bollywood-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

surya

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களை சூர்யாவின் மனைவி ஜோதிகா சந்தித்து கதை கேட்டு வருவதாகவும், விரைவில் ஹிந்தியில் சூர்யா அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

surya

அதன்படி, மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் ஹிந்தி படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.