அன்னைக்கி பெயிண்டர், இன்னைக்கி நடிகர் - நடிகர் சூரி பெருமிதம்.!
சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? வெளியான தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும், இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.
இதில், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதனால், வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறன் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.