கல்லூரி மாணவராக நடிக்கும் சூர்யா? வெளியான அசத்தல் தகவல்.!

கல்லூரி மாணவராக நடிக்கும் சூர்யா? வெளியான அசத்தல் தகவல்.!



Surya college student in sudha kongara movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போதைய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

இதனிடையே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

surya

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா இருவரும் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை 1960களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

surya

எனவே, இந்த படத்தின் ஒரு பகுதியில் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.