வேற லெவல் அசத்தல் கூட்டணி .! தீப்பொறி தெறிக்க வெளிவந்த சூர்யா 43 பட டைட்டில்.! மிரட்டல் அப்டேட்!!

வேற லெவல் அசத்தல் கூட்டணி .! தீப்பொறி தெறிக்க வெளிவந்த சூர்யா 43 பட டைட்டில்.! மிரட்டல் அப்டேட்!!



surya-43-movie-title-video-viral

தமிழ் சினிமாதுறையில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமான  சூர்யாவை வைத்து  சுதா கொங்கராவால்  இயக்கப்பட்ட படம்தான் சூரரை போற்று.  இப்படம்  ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை  பெற்ற நிலையில் பல்வேறு  தேசிய விருதுகளையும்  பெற்று படக்குழுவினருக்கு தகுதியான அங்கீகாரத்தை  பெற்றுக் கொடுத்தது. 

தற்போது   சூரரை போற்று  படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா  43 வது   படத்தில்  சுதா  கொங்கராவுடன் இணைகிறார். இத்திரைப்படத்தில்   துல்கர் சல்மான்,  நஸ்ரியா போன்ற பல்வேறு நடிகர்கள்  நடிக்க உள்ளனர் .  இசையமைப்பாளர்  ஜிவி.பிரகாஷ் குமார்  இசையில்  இப்படம் தயாராக உள்ளது. இது அவரின் 100வது படமாகும். 

இயக்குனர்  சிவா இயக்கிவரும்  கங்குவா படத்திற்கு பிறகு இப்படத்திற்கான  படப்பிடிப்பு  தொடங்க உள்ளதாம். இந்நிலையில் 2D என்டர்டெயின்மென்ட்   நிறுவனம்  சூர்யாவின்  43வது படத்தின் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில், படத்தின் தலைப்பில் பாதியை மறைந்து 'புறநானூறு' என மட்டுமே தெரிகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.