அட.. இது சூப்பராச்சே! நடிகர் சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்!

அட.. இது சூப்பராச்சே! நடிகர் சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்!



surya 40 movie first look released on his birthday

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் சூர்யாவின் 40வது படம் ஆகும்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் அவர்களுடன் திவ்யா துரைசாமி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் டி இமான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

birthday

இந்த நிலையில் சூர்யா வரும் ஜூலை 23 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் சூர்யா 40வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.