யோவ் யார்யா நீ!என்னைய்யா நீ இவ்ளோ திறமையோட அமைதியா இருக்க! ரசிகரின் கை வண்ணத்தில் வைரலாகும் சூர்யாவின் சூரரை போற்றும் டீசர்!

யோவ் யார்யா நீ!என்னைய்யா நீ இவ்ளோ திறமையோட அமைதியா இருக்க! ரசிகரின் கை வண்ணத்தில் வைரலாகும் சூர்யாவின் சூரரை போற்றும் டீசர்!


Surrarai porrum

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

ஆனால் சமீப காலமாகவே இவர் நடிக்கும் படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இருப்பினும் விடாமல் தனது வித்தியாசமான நடிப்பால் கதைகளை தேர்வு செய்து வருகிறது.

Surarai porrum

தற்போது கூட தனது அடுத்த படமான சூரரை போற்றும் படத்திற்காக தனது உடலை 20 கிலோ குறைத்து நடித்துள்ளார். இவ்வாறு இவர் செய்யும் வித்தியாசமான செயலால் தான் இவருக்கு இன்னும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலின் பென்சில் ஆர்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதனை போலவே தற்போது சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தின் டீசரை ரசிகர்கள் வடிவமைத்துள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.