சினிமா

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்.! அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா.?

Summary:

Suriya surrarai porrum

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த சில நாட்களாகவே இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் போனது. 

தற்போது இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷின் அசத்தலான குரலில் மண்ணுருண்ட பாடல் மாஸாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  


Advertisement