சூரரை போற்றும் படத்தில் வித்தியாசமான செயலை செய்து அசத்திய நடிகர் சூர்யா! உற்சாகத்தில் ரசிகர்கள்.

சூரரை போற்றும் படத்தில் வித்தியாசமான செயலை செய்து அசத்திய நடிகர் சூர்யா! உற்சாகத்தில் ரசிகர்கள்.



suriya-surrarai-porrum

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான என்ஜிகே, காப்பான் படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது.

Suriya

இந்நிலையில் தற்போது சூர்யா இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் மாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மாரா தீம் பாடலிற்காக நடிகர் சூர்யா ராப் பாடியுள்ளார் என ஜீவி தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.