சினிமா

தமிழர்களின் பாரம்பரியமான பட்டு பாவாடை, வேட்டி சட்டையில் கலக்கும் சூர்யாவின் மகன் மற்றும் மகள்..! வீடியோ உள்ளே.

Summary:

Suriya Jyothika daughter and son wearing tamil culture dress

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர் நடிகையான ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காப்பான் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது இவர் சூரரை போற்றும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கொரோனா பாதிப்பு காரணமாக வெளியாகாமல் தள்ளி போய் உள்ளது. 

இந்நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா குடும்பத்துடன் குல தெய்வம் கோவிலுக்கு சென்ற வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சூர்யாவின் மகன் மற்றும் மகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணித்து கோவிலுக்கு வந்த காட்சி அமைத்துள்ளது. 

அந்த வீடியோவில் சூர்யா-ஜோதிகாவின் மகன் வேட்டி சட்டையிலும், மகள் பட்டு பாவாடை சட்டையிலும் க்யூட்டாக உள்ளனர். தற்போது அந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். 

 


Advertisement