சினிமா

கசிந்தது தகவல்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்? வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தொடங்கி வாக்குவாதங்கள், சண்டைகள், உற்சாகங்கள், விழாக்கள் என நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும். பரபரப்பாகவும் 33 நாட்களை கடந்துள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்கால்  போட்டியாளர்களுக்கு இடையே மோதல்கள் நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், வெளியேறப் போவது யார் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், அவர் நாளை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.


Advertisement