அட.. இவருமா! மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செம ப்ளானோடு களமிறங்கும் பிரபலம்! வைரலாகும் வீடியோ!!

அட.. இவருமா! மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செம ப்ளானோடு களமிறங்கும் பிரபலம்! வைரலாகும் வீடியோ!!



suresh-chakaravarthy-participate-in-bigboss-ultimate

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. அதில் ராஜு வெற்றியாளர் ஆனார். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் தற்போது வரை சினேகன், ஜூலி, வனிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் Ultimate வீட்டிற்குள் போகவுள்ளதாக ப்ரமோ வீடியோக்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்த போட்டியாளரை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது சுரேஷ் சக்கரவர்த்தியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.