தைரியமாக முன்வாங்க! ஆதரவாக குரல்கொடுத்த சித்தார்த்! யாருக்கு தெரியுமா?

தைரியமாக முன்வாங்க! ஆதரவாக குரல்கொடுத்த சித்தார்த்! யாருக்கு தெரியுமா?


support condemned to pollachi issue

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த கொடூரம்  நிலையில் தற்போது இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

siddharth

மேலும் மீதி உள்ளவர்களையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், “பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்போது தான் அவர்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக சாட்சி அளிப்பார்கள். சமூகவலைதளங்களை ஆயுதமாக வைத்து பெண்கள் மீது தொடுக்கப்படும் துன்புறுத்தல்கள் பெரும் அச்சுறுத்தல் என்றும், நாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.