புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"இப்படி ஆகும் என்று கற்பனையில் கூட நினைச்சு பார்க்கல" சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி உருக்கம்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான பாடல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அதில் கலந்து கொண்ட பலரும் வாழ்க்கையில் அடுத்தடுத்த படிகளை நோக்கி முன்னேறி வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் செந்தில்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் பாடல்களை பாடி பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளனர். சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமான 'புஷ்பா' படத்தில் சாமி சாமி பாடலை ராஜலட்சுமி பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்றவ்சூழ்நிலையில் ராஜலட்சுமி கதாநாயகியாக 'லைசன்ஸ்' எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை jRG ப்ரோடக்ஷன் தயாரிப்பில், கணபதி பாலமுருகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் திரையில் வெளியே வரவிருக்கிறது.
இது போன்ற நிலையில் 'லைசென்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராஜலட்சுமி, மேடையில் பேசிய போது "இப்படி கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிப்பேன் என்று கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பெரிய விஷயம்" என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.