Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
எம்ஜிஆர்யினால் பறிபோன ரஜினிகாந்தின் நிம்மதி.. சூப்பர் ஸ்டாரின் புலம்பலுக்கு அவரது மனைவிதான் காரணமா.?
எம்ஜிஆர்யினால் பறிபோன ரஜினிகாந்தின் நிம்மதி.. சூப்பர் ஸ்டாரின் புலம்பலுக்கு அவரது மனைவிதான் காரணமா.?

தமிழ் சினிமா துறையில் எம்ஜிஆரின் படங்களுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு ரசிகர் கூட்டங்கள் பெருகியிருந்தன. இவரின் நடிப்பு திறமையாலும், நல்ல குணத்தாலும் மக்களை கவர்ந்தார் தொடர்ந்து அவர்களுக்கு எல்லாவிதமான உதவியும் செய்து வந்தார் எம்ஜிஆர்.
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு அவரை பிடிக்காமல் போய்விடும் என்பது சினிமா துறையில் நிலவும் பொதுவான கருத்து. ஆனால் எம்ஜிஆர் நடிக்கும் போதும் அரசியலிலும், சினிமாவிலும் எப்போதும் மக்களின் மனம் கவர்ந்தவராகவே இருந்தார்.
இது போன்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மேடையில் எல்லா செல்வமும் பணமும் இருந்தும் நிம்மதி இல்லை என்று புலம்பியிருந்தார். இதற்கு இவரது மனைவி லதா தான் காரணம் என்று தமிழ் பேச்சாளரான பாண்டியன் வீடியோவில் கூறியிருந்தார்.
மேலும் எம்ஜிஆரை போன்று சூப்பர் ஸ்டாரும் தானம் கொடுக்க முயன்றாலும் இவரது மனைவி விடுவதில்லையாம். படப்பை என்ற இடத்தில் ஏராளமான இடத்தை கஷ்டப்படும் மக்களுக்கு தானமாக கொடுத்த ரஜினிகாந்த் இவரது மனைவி அந்த இடத்தை திருப்பி பெற்றுக் கொண்டாராம். இச்செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.