அட அட... என்ன அழகு... மாடர்ன் உடையில் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்... குவியும் லைக்ஸ்கள்!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய இசையால் அனைவரையும் கவர்ந்து தனக்கென தனிஇடத்தை பிடித்தவர் பிரியங்கா.
இவர் குரலில் பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. மேலும் பிரியங்கா பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், இவர் பல் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தற்போது மாடர்ன் உடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கருப்பு நிற உடையில் என்ன அழகா போஸ் கொடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.