மதுப்போதைக்கு அடிமையானாரா சூப்பர் சிங்கர் பிரகதி! விளக்கமளித்து அவரே வெளியிட்ட அதிரடி பதிவு!

Summary:

Super singer pragathi explain about drink

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் பின்னணி பாடகியாக ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 

மேலும் பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகமாகியிருந்தார்.  அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் பிரகதி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் 
 பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து பிரகதி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதாக தகவல்கள் பரவியது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து பிரகதி தனது சமூக வலைத்தளபக்கத்தில்,  
இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் நம்பி விடாதீர்கள். இந்த செய்தி குறித்து விளக்கம் கேட்க, ரிப்போர்ட் செய்ய என்னை யாரும் அணுகவேண்டாம். இது அந்த அளவுக்கு நமது நேரத்தையும் எனர்ஜியையும் செலவு செய்ய தகுதியானது அல்ல என தெரிவித்துள்ளார்.


Advertisement