சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி தனது தாயுடன் போட்டுள்ள ஆட்டத்தை பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!

சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி தனது தாயுடன் போட்டுள்ள ஆட்டத்தை பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!



Super singer pragathi dance with her mom

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என்ற பெயரில் மாற்றி மாற்றி நடத்தி வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து தனது குரலில் ரசிகர்களை கவர்ந்தவர் பிரகதி. அதனை தொடர்ந்து பிரகதி தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதில் பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற படங்களில் இவர் குரலில் பாடிய பாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரகதி தற்போது தனது தாயுடன் நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.