சூப்பர்சிங்கர் பூவையாரின் வினோத ஆசை!! கொஞ்சமும் யோசிக்காமல் தளபதி செய்த காரியம்!!

சூப்பர்சிங்கர் பூவையாரின் வினோத ஆசை!! கொஞ்சமும் யோசிக்காமல் தளபதி செய்த காரியம்!!


super-singer-poovaiyar-talk-about-vijay

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், தொடர்கள் என தினம் தினம் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்கும் பிரபலங்களையும் உலகறிய செய்வதில் விஜய் தொலைக்காட்சி முன்னோடியாக திகழ்கிறது.

சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்கள்தான்.அந்தவகையில் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கான சீசன் ஆறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பூவையார்.

poovaiyaar

அதனை தொடர்ந்து பூவையார் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பூவையரிடம், விஜய் குறித்து கேட்டபோது, விஜய் சார்  எந்த ஒரு பாடிகாட்டும் இல்லாமல், பந்தா இல்லாமல் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். நீ நன்றாக பாடுகிறாய், மிக  நன்றாக கலாய்க்கிறாய். எப்பவும் இப்படியே இரு மாறிடாதே என கூறினார்.
 
மேலும் நான் அவரிடம் ஜில்லா பட ஸ்டைலில் பேசுமாறு கேட்டேன், அவரும் கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென ஜில்லா படத்தில் பேசுவது போலவே பேசினார் என உற்சாகத்துடன் கூறியுள்ளார்.