தமிழகம் சினிமா 18 Plus

மனம் திறந்த கவர்ச்சி நடிகை; உற்சாகத்தில் தமிழ் ரசிகர்கள்!!!

Summary:

sunny leone tweet in tamil

தன்னுடைய வாழ்கை வரலாறு படம் குறித்து நடிகை சன்னி லியோன் தன ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவு கோரியுள்ளார்.

பாலிவுட்டில் கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர், தற்போது வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு ‘கரஞ்சித் கவுர்’ என்ற பெயரில் படமாகியிருக்கிறது. ஆதித்யா தத் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

தொடர்புடைய படம்

மேலும் அப்படத்திற்கான ட்ரெய்லர்   தமிழில் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்காக  சன்னி லியோன்  தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

அதில் அவர் “அனைவருக்கும் வணக்கம். தமிழ் உள்படப் பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது. நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement