13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
500 முறை.. கவர்ச்சி புயல் சன்னி லியோனால் பாதிக்கப்பட்ட இளைஞர்.! தொந்தரவால் கடுப்பாகி எடுத்த அதிரடி முடிவு!!

பாலிவுட்டில் கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சன்னிலியோன் தற்போது இயக்குனர் ரோஹித் சௌகான் இயக்கத்தில் உருவான அர்ஜூன் பாட்டியாலா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது. அப்படத்தில் தன்னுடைய எண் என கூறி சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
இதனை சன்னி லியோனுடைய போன் நம்பர் என எண்ணிய இளைஞர்கள் அவருடன் பேசுவதற்காக அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளனர்.ஆனால் அந்த போன் நம்பர் டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்ற வாலிபருடையது. அவர் கடந்த 12 ஆண்டுகளாக அந்த போன் எண்ணை பயன்படுத்தி வந்துள்ளார்.
இவ்வாறு இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட தவறான அழைப்புகள் வந்துள்ளது. மேலும் போன் செய்த அனைவரும் சன்னி லியோனா என கேட்டுள்ளனர். இதனால் பெரும் தொந்தரவுக்கு ஆளான அந்த வாலிபர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.