சினிமா

கணவரின் கையில் விலங்கை மாட்டிக்கொண்டு ஜிம்மில் சன்னி லியோன் செய்த செயல்!! வைரலாகும் வீடியோ!!

Summary:

sunny leone in gym


பாலிவுட்டில் கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது குழந்தைகள், கணவருடன் வெளியூர் சென்றுவிடுவார் சன்னி லியோன். இந்நிலையில் 10 years challenge போலவே தற்போது பிரபலமாகிவரும் Handcuff challengeல் அவர் பங்கேற்றுள்ளர்.

அது இல்லாமல் இருக்க முடியாது என கருதும் விஷயத்துடன் ஒருவர் கைவிலங்கு போட்டு பூட்டிக்கொள்ளவேண்டும் இதுதான் இந்த சேலஞ்சின் விதிமுறை.

அதற்காக சன்னி லியோன் தன் கணவர் கையுடன் தன் கையை விலங்கு போட்டு பூட்டி கொண்டு இருவரும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற விடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement