தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா! தீயாய் பரவிய தகவல்! உண்மையை உடைத்த நடிகை!!

தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா! தீயாய் பரவிய தகவல்! உண்மையை உடைத்த நடிகை!!


sundari-serial-actress-explain-abouther-situation

சன் தொலைக்காட்சியில் கருப்பாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அவள் தனது வாழ்வில் சந்திக்கும் சவால்கள், கனவை அடைய மேற்கொள்ளும் போராட்டங்கள் குறித்தும் கூறும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி. இந்த தொடரில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லுஸ். 

திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர், பல்வேறு வித்தியாசமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமின்றி அவர் சில குறும்படங்களிலும் மேலும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா மற்றும்  செத்தும் ஆயிரம் பொன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் ஏஆர் ரஹ்மானின் இசை ஆல்பம் ஒன்றிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் கேப்ரியல்லாவுக்கு, கொரோனா தொற்று உறுதியானதாகவும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவரே தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது கேப்ரியல்லா தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருவதாகவும், அதனால் சுந்தரி சீரியல் நிறுத்தப்படுவதாகவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பகிர்ந்த கேப்ரியல்லா டைட்டில பாரு உயிருக்கு போராடுறாங்களாம்.  நான் நல்லாதான் இருக்கேன். உடம்பு தேறிகிட்டு வருது என தெரிவித்துள்ளார்.