அட.. இதைதானே எதிர்பார்த்தோம்! அடையாளமே தெரியாத அளவிற்கு செம ஸ்டைலா மாறிய சுந்தரி!! இனி வேற லெவல்தான்!!

அட.. இதைதானே எதிர்பார்த்தோம்! அடையாளமே தெரியாத அளவிற்கு செம ஸ்டைலா மாறிய சுந்தரி!! இனி வேற லெவல்தான்!!


Sundari getup change in serial photo viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர்கள் ஏராளம். அவ்வாறு தற்போது மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சுந்தரி. இத்தொடரில் முக்கிய ஹீரோயினாக சுந்தரி கதாபாத்திரத்தில் கேப்ரியல்லா நடித்து வருகிறார்.

இத்தொடர் நிறக் குறைவால் கணவனால் அவமானப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்ட கிராமத்துப் பெண் சுந்தரி தனது விடா முயற்சியால் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் கதையம்சம் கொண்டது. இத்தொடரில் கலெக்டராக படித்துக் கொண்டே, வேலை பார்த்துவரும் சுந்தரி கதாபாத்திரத்திற்கு கம்பெனி ஒன்றில் சிஇஓ பதவி கொடுக்கப்படுகிறது.

அதற்கேற்றவாறு கிராமத்து சுந்தரி கெட்டப் மாற்றப்பட்டு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு செம ஸ்டைலாக மாடர்ன் சுந்தரியாக மாறியுள்ளார். மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் அட.. நம்ம சுந்தரியா இது! இனி வேற லெவல்தான் என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.